கங்கை ஆற்றில் மிதக்கும் நூற்றுக்கணக்கான சடலங்கள்... கொரோனாவில் இறந்தவர்களா?
கங்கை ஆற்றில் மிதக்கும் நூற்றுக்கணக்கான சடலங்கள்... கொரோனாவில் இறந்தவர்களா?

பீகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தில் கங்கை நதி செல்கிறது. இந்நதியை ஒட்டியுள்ள சவுசா கிராமம் அருகே மக்கள் திடீரென அதிர்ச்சி அடைந்து பீதியில் இருந்தனர். அந்த கிராமத்தையொட்டி செல்லும் கங்கை நதியில் சுமார் 40 சடலங்கள் கரை ஒதுங்கியும் மிதந்தும் காணப்பட்டதே இதற்கு காரணம். அப்பகுதியினர் சிலர் வீடியோவாக எடுத்து இதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இந்த வீடியோ வைரலானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த உள்ளூர் நிர்வாகத்தினர் அங்கு விரைந்தனர். ஆனால், அந்த சடலங்களை தின்பதற்காக நாய்கள் அந்த பகுதியை மொய்த்தன.

மேலும் அப்பகுதியில் துற்நாற்றம் வீசியதால் பெரும் சவால் நிறைந்து காணப்பட்டது. கரை ஒதுங்கியதில் பெரும்பாலானவை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் சடலமாக இருக்கலாம் என அந்தப் பகுதியினர் சந்தேகிக் கின்றனர். இந்த சடலங்கள் உத்தரபிரதேசத்தில் இருந்து வந்திருக்கலாம் என்றும் பீகார் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதாவது சடலங்களை அடக்கம் செய்ய சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாவதால், ஏழைகள் சடலங்களை கங்கையில் வீசிச் சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. கரை ஒதுங்கிய சடலங்களை நாய்கள் தின்பதால் நோய் பரவும் அபாயம் அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். இதுபற்றி விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு அதிகாரிகள் குறைவான எண்ணிக்கையிலான சடலங்கள் என்று சொன்னாலும் நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்கள் கரை ஒதுங்கி கிடப்பதாக அந்தப் பகுதியினர் கூறியுள்ளனர். சடலங்களை உடனடியாக அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்தப் பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
newstm.in

