Theme Check

திருமண நடனத்தில் கைவிட்ட கணவன்.. கீழே விழுந்த மணமகள் - வைரல் வீடியோ !

திருமண நடனத்தில் கைவிட்ட கணவன்.. கீழே விழுந்த மணமகள் - வைரல் வீடியோ !

திருமண நடனத்தில் கைவிட்ட கணவன்.. கீழே விழுந்த மணமகள் - வைரல் வீடியோ !
X

அனைத்து திருமணங்களிலும் எப்படியும் ஒரு சுவாரஸ்யமான சம்பவங்களாவது நடைபெறுவது உண்டு. அதில் ஒரு சில நிகழ்வுகள் வைரலாகி வருகிறது. சில விரும்பதகாத நிகழ்வுகளும் நடந்துவிடுவது உண்டு. அந்த வரிசையில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வெளிநாடுகளில் திருமணத்தின் போது கணவன்- மனைவி நடனம் ஆடுவது வழக்கமாக உள்ளது. தற்போது இந்த வழக்கம் நம் மெல்ல மெல்ல இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. திருமண நிச்சயதார்த்தங்களிலும், முகூர்த்தங்களிலும் மணமகனும், மணமகளும் ஆடி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் அண்மையில் டெல்லியில் திருமண விழா ஒன்றில் நடைபெற்ற மணமக்களின் நடனம் வைரலாகி வருகிறது. சமீபத்தில் டெல்லியில் திருமண விழா ஒன்று நடைபெற்றது. அதில் அழகான உடைகளை அணிந்திருந்த திருமண ஜோடி நடனம் ஆடத் தொடங்குகின்றனர். அப்போது சுற்றி இருந்தவர்கள் எல்லாம் கைகளை தட்டி ஆரவாரம் செய்கின்றனர்.

marriage

நடனம் ஆட தொடங்கிய சில வினாடிகளிலேயே இருவரும் கீழே விழுந்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை மணப்பெண்ணே தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

மேலும் அவர் தனது பதிவில், இதனை தான் காதலில் விழுவது என்று கூறுவார்கள் என்று நினைக்கிறன். நான் அவரை கவனித்தேன். அவர் என்னை கவனித்தாரா? என்று தெரியவில்லை. 5.9 அடி உயரம் கொண்ட நான் தான் இதற்கு காரணம். அவர் இந்த பிரச்சனைக்கு காரணம் இல்லை என்று நிச்சயமாக சொல்லுவேன். கீழே விழுந்தும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. டேவிட் தான் பாவம். பரிதாபமாக இருக்கிறார், என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it