Theme Check

2-வது திருமணம் செய்வதற்காக மனைவியின் தங்கையை கடத்திய கணவன்..!!

2-வது திருமணம் செய்வதற்காக மனைவியின் தங்கையை கடத்திய கணவன்..!!

2-வது திருமணம் செய்வதற்காக மனைவியின் தங்கையை கடத்திய கணவன்..!!
X

கர்நாடகா மாநிலம் தும்கூர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். தனியார் கம்பெனியில் பணி புரியும் இவருக்கும் பெங்களூர் கொடிகெனஹள்ளி பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இதற்கிடையில் மனைவியின் தங்கை மேல் ஒரு கண் வைத்த கணவர் தேவராஜ், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மனைவியின் தங்கையை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு அந்த பெண்ணை வறுபுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

கடந்த 4 ஆண்டுகளாக தனது காதலை மனைவியின் தங்கையிடம் தேவராஜ் சொல்லிவந்த நிலையில், அந்தபெண்ணோ அதற்கு சம்மதிக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தேவராஜ் மனைவியின் தங்கையை நண்பர்களுடன் சேர்த்து கடத்த திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி நண்பர்கள் இருவர் உதவியோடு கடந்த 22-ம் தேதி பெங்களூரு சென்ற தேவராஜ், மனைவியின் தங்கை பணிபுரியும் நிறுவனத்தின் அருகே தனது நண்பர்களுடன் காத்திருந்துள்ளார். அப்போது பணி முடிந்து இரவு 10 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் சென்ற மனைவியின் தங்கையை பார்த்த தேவராஜ், அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

பின்னர் அவரது இருசக்கர வாகனத்தை வழிமறித்து அந்தபெண்ணை, நண்பரகளின் உதவியுடன் தனது காரில் கடத்தி சென்றுள்ளார். இந்த காட்சிகள் அந்தப் பகுதியில் அமைக்கப்பட்ட சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற தனது மகள் இரவு ஆகியும் வீடு திரும்பாத நிலையில் சந்தேகமடைந்த பெற்றோர்கள், கொடிகெனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்தப் பெண் பணிபுரியும் நிறுவனத்திலிருந்து அந்த பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது மாருதி நகர் பகுதியில் அந்தப் பெண் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம நபர்கள் பெண்ணை கடத்தி செல்வது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பின்னர் கார் நம்பர் பிளேட்டை ஆதாரமாக வைத்த விசாரணை மேற்கொண்ட போலீசார் பெண்ணை கடத்தி சென்றது அவருடய அக்கா கணவர் தேவராஜ் என்பதை கண்டறிந்தனர். காரில் கடத்தப்பட்ட பெண்ணை காப்பாற்ற போலீசார் தனிப்படைகள் அமைத்து கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் ஹாசன் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடும் போது அந்த வழியாக வந்த காரை மடக்கி பிடித்த போலீசார் தேவராஜ் உள்பட 3 பேரை கைது செய்து பெண்ணை காப்பாற்றினர். இந்த சம்பவம் குறித்து கொடிகெனஹள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story
Share it