Theme Check

மனைவியை காப்பாற்ற கிணற்றில் குதித்த கணவர் பலி.. கரைக்கு வந்த மனைவியிடம் விசாரணை !!

மனைவியை காப்பாற்ற கிணற்றில் குதித்த கணவர் பலி.. கரைக்கு வந்த மனைவியிடம் விசாரணை !!

மனைவியை காப்பாற்ற கிணற்றில் குதித்த கணவர் பலி.. கரைக்கு வந்த மனைவியிடம் விசாரணை !!
X

கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவன் நீரில் மூழ்கி இறந்து, மனைவி உயிர் பிழைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள புடிபோரி பகுதியில் ஒரு வீட்டின் கணவன்- மனைவி தனியாக வசித்து வந்துள்ளனர். ஆனால், கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே, தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் சரியான நேரத்தில் உணவை சமைக்காததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு காரணமாக வீட்டில் இருந்து வெளியேறிய மனைவி, அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

death

இதனை கண்ட அவரது கணவர், மனைவியை காப்பாற்ற கிணற்றில் பாய்ந்துள்ளார். ஆனால் அந்த கணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஆனால் கிணற்றில் இருந்து குழாயைப் பிடித்தபடி மூழ்காமல் இருந்த மனைவி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர், அந்நபரின் உடலை மீட்டனர். மேலும் கணவர் உயிரிழப்பு தொடர்பாக அவரது மனைவியிடமும் விசாரணை நடத்துகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it