Theme Check

கிரிக்கெட் பேட்டால் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்!!

கிரிக்கெட் பேட்டால் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்!!

கிரிக்கெட் பேட்டால் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்!!
X

சேலத்தில் இளம்பெண் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கணவரின் பெற்றோரை காவல்துறையினர் வரதட்சணை கொடுமை வழக்கில் கைது செய்தனர்.

ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த தனுஸ்ரீயா- கீர்த்திராஜ் தம்பதிக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் ஜூன் மாதம் 11ஆம் தேதி தனுஸ்ரீ தற்கொலை செய்துக்கொண்டதாக கீர்த்திராஜ் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தனுஸ்ரீ பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தனுஸ்ரீயாவை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு கீர்த்திராஜ் தற்கொலை நாடகம் ஆடியது அம்பலமானது.

dowry

கீர்த்திராஜை கைது செய்த போலீஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கீர்த்தி ராஜ் மற்றும் மனைவி தனுஸ்ரீயா ஆகிய இருவருக்கும் இடையே அவ்வப்போது பிரச்னை எழுந்து வந்தது தெரியவந்தது.

கீர்த்திராஜ் மற்றும் அவரது பெற்றோர் வரதட்சனை கேட்டு தனுஸ்ரீயாவை கொடுமைப்படுத்தி வந்ததாகவும் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக சேலம் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

salem-murder

பல்வேறு தரப்பிலும் விசாரணை நடத்தி சேலம் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி அளித்த அறிக்கையின் அடிப்படையில் தனுஸ்ரீயாவை அவரது கணவர் மற்றும் பெற்றோர் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் கீர்த்திராஜின் தந்தை பெரியசாமி மற்றும் தாயார் ரஞ்சனி ஆகியோரை சூரமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

newstm.in

Next Story
Share it