மனைவியை 8ஆவது மாடியிலிருந்து தூக்கிவீசிக் கொலை செய்த கணவர் !!
மனைவியை 8ஆவது மாடியிலிருந்து தூக்கிவீசிக் கொலை செய்த கணவர் !!

குடும்பச் தகராறில் சண்டை முற்றியதால் மனைவியை எட்டாவது மாடியிலிருந்து தூக்கிவீசிக் கொலை செய்துள்ளார் அப்பெண்ணின் கணவர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே கோஸைகஞ்ச் பகுதியில், சஞ்சீவ் (36)- நீது (32) தம்பதி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த 2011ஆம் ஆண்டு திருமணமான நிலையில், 7 வயதில் மகளும், 5 வயதில் மகனும் உள்ளனர். திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் இருந்தே கணவன்- மனைவி இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது வாய்த்தகராறு முற்றிய நிலையில், சஞ்சீவ், தனது மனைவி நீதுவை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் ஆத்திரம் தீராத அவர், தாங்கள் வாடகைக்கு குடியிருந்த 8வது மாடியிலிருந்து கீழே தூக்கிப்போட்டுள்ளார். இதில் நீது சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனைகண்ட குடியிருப்பு வாசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் அளித்த தகவலின்பேரில் விரைந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இது குறித்து நீதுவின் சகோதரர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சஞ்சீவுக்கு வேறொரு பெண்ணுடன் நெருங்கிய தொடர்பிருந்ததும், அதனை நீது கண்டித்ததும் சண்டைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
newstm.in

