கர்ப்பிணி மனைவியை கழுத்தறுத்து கொலைச் செய்த கணவன்! கேள்வி கேட்டதால் நடந்த கொடூரம்!!
ஊர் சுத்திய கணவர்.. கேள்வி கேட்ட மனைவியை கொலை செய்த கொடூரம்..

திருச்சி மாவட்டம், முசிறியில் கணவனே கர்ப்பிணி மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி பார்வதி புரத்தைச் சேர்ந்த கமல் காந்த் - ஜீவிதா தம்பதிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. கமல் காந்த் பொறியாளராக சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில் தற்போது வேலை இல்லாமல் வீட்டில் தான் உள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற கமல் காந்த் மனைவியை கத்தியால் குத்தி அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
மேலும் தனது கையையும் கத்தியால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பின்பு ரத்தம் சொட்ட சொட்ட கமல் காந்த் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்ததை பார்த்த அவரது தாய் அலறி சத்தம் போடவே அருகில் வசித்தவர்களுக்கு தகவல் தெரிந்து .
முசிறி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஜீவிதாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கணவனே மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் ஜீவிதா ஒன்றரை மாத கர்ப்பிணியாகவும் இருந்திருக்கிறார்.இந்தநிலையில் கமல் காந்த முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் . ஜீவிதா ஒன்றரை மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கணவனே கழுத்தறுத்து கொலை செய்த ச ம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in



