Theme Check

யூ-டியூப் பார்த்து பிரசவம் பார்த்த கணவன்: குழந்தை பலி.. மனைவி மருத்துவமனையில் அனுமதி..!

யூ-டியூப் பார்த்து பிரசவம் பார்த்த கணவன்: குழந்தை பலி.. மனைவி மருத்துவமனையில் அனுமதி..!

யூ-டியூப் பார்த்து பிரசவம் பார்த்த கணவன்: குழந்தை பலி.. மனைவி மருத்துவமனையில் அனுமதி..!
X

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம், நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். இவருக்கு, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்நிலையில், கர்ப்பம் அடைந்த அவரது மனைவிக்கு கடந்த 13-ம் தேதி பிரசவம் நாள் கொடுக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நாளில் மனைவிக்கு பிரசவ வலி வராத நிலையில், கடந்த 18-ம் தேதி மாலை அவரது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து லோகநாதன், யூ-டியூப் வீடியோ பார்த்து அதன்படி தனது மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார். அப்போது, இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, அவரது மனைவி மயக்கம் அடைந்துள்ளார்.
Ranipettai: Wife gives birth after watching YouTube ..? Child mortality ||  ராணிப்பேட்டை: யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம்..? குழந்தை உயிரிழப்பு
அவரை, அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர்.

அங்கு அவரது மனைவி சிகிச்சை பெற்றுவரும் நிலையில் குழந்தை இறப்பு குறித்து லோகநாதனிடம் நெமிலி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யூ-டியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவரால் குழந்தை உயிரிழந்த சம்பவம், அந்த பகுதி மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story
Share it