Theme Check

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த கணவன்.. போலீசில் மாட்டிவிட்ட மனைவி..!

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த கணவன்.. போலீசில் மாட்டிவிட்ட மனைவி..!

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த கணவன்.. போலீசில் மாட்டிவிட்ட மனைவி..!
X

சென்னையில், பக்கத்து வீட்டு பெண்கள் குளிப்பதையும் அவர்களின் அசைவுகளையும் இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்து ரசித்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் தனது காதல் மனைவியுடன் வசித்து வருபவர் சேகர். தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை.

இந்நிலையில், சேகருக்கு பக்கத்து வீட்டு பெண்கள் குளிப்பதையும், அவர்களின் அங்க அசைவுகளையும் படம் பிடித்து பார்க்கும் ஆசை ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் குளிப்பதை படம் பிடித்துள்ளார்.

இதுகுறித்து அந்தப் பெண் சேகரின் மனைவியிடம் புகார் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கணவரின் நடவடிக்கைகளை கண்காணித்தார்.

இதையடுத்து, கணவர் சேகர் தூங்கிக் கொண்டிருந்த போது அவருக்கு தெரியாமல் அவரது செல்போனை எடுத்து ஆய்வு செய்தார்.

அப்போது, சேகரின் செல்போனில் ஆபாச வீடியோக்கள் பல இருந்துள்ளது. இதை பார்த்து அவர் மேலும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கணவரின் செயலுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என நினைத்தார்.

இதையடுத்து, திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசில் தனது கணவர் சேகரின் செல்போனை ஒப்படைத்து, புகார் தெரிவித்தார். போலீசார் செல்போனை ஆய்வு செய்தனர்.

அதில், பெண்களின் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் இருந்தன. அத்துடன், பக்கத்து வீட்டு பெண்கள் குளிப்பது மட்டுமின்றி, அவர்கள் வாசலில் கோலம் போடுவது உள்ளிட்ட வீடியோக்களையும் சேகர் தனது செல்போனில் பதிவு செய்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சேகர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தனது கணவர் செய்த குற்றத்தை பொறுத்துக் கொள்ளாமல் அவரை துணிச்சலாக போலீசில் பிடித்துக் கொடுத்த சேகரின் மனைவியை திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் பாராட்டினர்.

Next Story
Share it