Theme Check

உயிருக்கு போராடி கொண்டிருந்த கணவர்! மனைவி செய்த நெகிழ்ச்சியான செயல்! அதிர்ந்த உறவினர்கள்!

உயிருக்கு போராடி கொண்டிருந்த கணவர்! மனைவி செய்த நெகிழ்ச்சியான செயல்! அதிர்ந்த உறவினர்கள்!

உயிருக்கு போராடி கொண்டிருந்த கணவர்! மனைவி செய்த நெகிழ்ச்சியான செயல்! அதிர்ந்த உறவினர்கள்!
X

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிலருக்கு பல இணை நோய்கள் ஏற்பட்டு வருகிறது. முக்கியமாக, ரத்தக்கட்டு பிரச்னை காரணமாக பாலியல் உறவில் ஈடுபடுவதில் பல ஆண்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த பின்னர் ஆண்மைக் குறைவு பிரச்னையும் ஏற்படுகிறது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் வதோதராவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஐசியூவில் போராடி வரும் ஒருவரின் மனைவி, ஆணிடம் இருந்து விந்தணுவை பெற்று, அதில் ஒரு விந்தணுவை பெண்ணின் கருமுட்டைக்குள் செலுத்தி கர்ப்பம் தரிக்கும் IVF/ART முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பப்பட்டு உள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த நபர் உயிர் பிழைக்க வாய்ப்பு குறைவு என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அவரின் விந்தணுவை சேமித்து அதன்மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அந்த பெண் விருப்பப்பட்டு உள்ளார். ஆனால், அந்த நபரின் விந்தணுவை எடுக்க அவர் அனுமதி அளிக்க வேண்டும். உயிருக்கு போராடும் அந்த நபர், அனுமதி கொடுக்கும் நிலையில் இல்லை.

corona 1

இதனால், கோர்ட் மூலமாக மட்டுமே அனுமதி பெற்று, அந்த நபரின் விந்தணுவை மருத்துவர்கள் சேமிக்க முடியும். இதையடுத்து அந்தப் பெண் அவசர வழக்காக குஜராத் ஐகோர்ட்டில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அஸ்தோஷ் ஜெ சாஸ்திரி, உடனே விந்தணுவை சேமிக்கும்படி அனுமதி வழங்கினார்.

இதையடுத்து, உடனடியாக அந்த நபரின் விந்தணு பாதுகாப்பான மருத்துவ முறை மூலம் வெளியே எடுக்கப்பட்டு, முறையாக சேமிக்கப்பட்டது. அந்த நபர் இறக்கும் பட்சத்தில் அல்லது பாலியல் உறவில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள வசதியாக அவரின் விந்தணு சேமிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு அவசர வழக்கு என்பதால், மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதால் இப்படி தீர்ப்பு வழங்கியதாக நீதிபதி குறிப்பிட்டு இருந்தார். எதிர்காலத்தில் இந்த தீர்ப்பு மற்ற வழக்குகளில் எடுத்துக்காட்டாக மாறி விடக்கூடாது என்பதால் அவர் இப்படி குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கில் குஜராத் மாநில அரசின் நிலைப்பாட்டை விளக்கும்படி குஜராத் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:
Next Story
Share it