Theme Check

மலைப்பகுதியில் கணவன் உடல்.. விசாரணையில் மனைவி சொன்ன ‘பகீர்’ தகவல்..!

மலைப்பகுதியில் கணவன் உடல்.. விசாரணையில் மனைவி சொன்ன ‘பகீர்’ தகவல்..!

மலைப்பகுதியில் கணவன் உடல்.. விசாரணையில் மனைவி சொன்ன ‘பகீர்’ தகவல்..!
X

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ராம்புரா போலீஸ் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதியில் கடந்த 21-ம் தேதி ஒருவர் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த மொலகால்மூரு போலீசார், அவருடைய உடலை மீட்டு விசாரித்தனர்.

விசாரணையில், அவர் ஆந்திர மாநிலம் ராயதுர்கா அருகே பொம்மனஹட்டியைச் சேர்ந்த ஆட்டு வியாபாரி லிங்கப்பா என்பதும், அவரை மர்ம நபர்கள் கொலை செய்துள்ளதும் தெரியவந்தது. இதுகுறித்து ராம்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் போலீசார் ஆந்திராவுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, லிங்கப்பாவின் மனைவி பர்வதம்மா (32) மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, கணவர் லிங்கப்பாவை கள்ளக்காதலன் கொன்னூர் சாமி (28) என்பவருடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், லிங்கப்பாவின் மனைவி பார்தவம்மாவுக்கும், கொன்னூர் சாமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

இதனால் அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதுபற்றி லிங்கப்பாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால், மனைவியையும், கொன்னூர் சாமியையும் லிங்கப்பா கண்டித்துள்ளார்.

இந்நிலையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் லிங்கப்பாவை தீர்த்துக்கட்ட அவரது மனைவி பார்வதம்மாவும், கள்ளக்காதலன் கொன்னூர் சாமியும் முடிவு செய்தனர்.

அதன்படி, ஆட்டு வியாபாரத்துக்காக லிங்கப்பா, மொலகால்மூருக்கு சென்றபோது, கொன்னூர் சாமி அவரை பின் தொடர்ந்து சென்று கொலை செய்து உடலை மலைப்பகுதியில் வீசிச் சென்றது தெரியவந்தது.

Next Story
Share it