Theme Check

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் ஹூண்டாய் கிரெட்டா !

டெல்லியில் நடைப்பெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஹூண்டாய் கிரெட்டா மாடல், ஹூண்டாய் IX25 மாடலைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதே கிரெட்டா காரானது சீனாவில் IX25 என்ற பெயரில் விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் ஹூண்டாய் கிரெட்டா !
X

தென் கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய், இந்த வருட ஆட்டோ எக்ஸ்போவில் தனது புதிய ஹூண்டாய் கிரெட்டா காரினை அறிமுகம் செய்கிறது. ஹூண்டாய் கிரெட்டா காரினை அந்நிறுவனம் அறிமுகம் செய்வதற்கு முன்பாக எஸ்யூவி மாடலுக்கான டீஸர்களை வெளியிட்டு தெறிக்க விட்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் ஹூண்டாய் கிரெட்டா !

டெல்லியில் நடைப்பெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஹூண்டாய் கிரெட்டா மாடல், ஹூண்டாய் IX25 மாடலைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதே கிரெட்டா காரானது சீனாவில் IX25 என்ற பெயரில் விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடல் கார்களில் பெரிய கிரில், மெல்லிய இன்டிகேட்டர் விளக்குகள், மேம்படுத்தப்பட்ட பம்பர், இருபுறங்களிலும் ஸ்கிட் பிளேட்கள் காணப்படுகின்றன. இவற்றுடன் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஹூண்டாய் நிறுவனத்தின் புளூ லின்க் கனெக்டிவிட்டி சூட் என வாகன ப்ரியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதத்தில் அத்தனை அம்சங்களும் இடம் பெற்றிருக்கின்றன

newstm.in

Tags:
Next Story
Share it