நான் திமுக உறுப்பினர்தான்; சொல்கிறார் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார்..!

நான் திமுக உறுப்பினர்தான்; சொல்கிறார் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார்..!

நான் திமுக உறுப்பினர்தான்; சொல்கிறார் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார்..!
X

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார், இந்திய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பாரிவேந்தர், மதிமுகவைச் சேர்ந்த கணேசமூர்த்தி மற்றும் கொங்கு மக்கள் கட்சியைச் சேர்ந்த சின்னராஜ் ஆகியோர் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், "மாற்றுக் கட்சியினர் திமுக சின்னத்தில் போட்டியிடுவது சட்டத்திற்கு புறம்பானது; அவர்களின் வெற்றி செல்லாது" என அறிவிக்கக் கோரி, தேசிய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில், விழுப்புரம் எம்பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான ரவிக்குமார், "நான் திமுக உறுப்பினர்தான்" என பதில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

2019ம் ஆண்டு தேர்தலின் வேட்புமனு தாக்கலின்போதும் தாம் திமுக உறுப்பினராகத்தான் இருந்ததாகவும் இதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ரவிக்குமார் பதில் அளித்திருக்கிறார்.

இதற்கு முன்பு, மதிமுகவைச் சேர்ந்த ஈரோடு எம்பி கணேசமூர்த்தியும், "நான் திமுக உறுப்பினர்" என பதில்மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:
Next Story
Share it