Theme Check

மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. வாள் சண்டை வீராங்கனை பவானி தேவி உருக்கம் !!

மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. வாள் சண்டை வீராங்கனை பவானி தேவி உருக்கம் !!

மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. வாள் சண்டை வீராங்கனை பவானி தேவி உருக்கம் !!
X

மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று இந்திய வீராங்கனை பவானி தேவி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வாள் ‌சண்டையில் இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை பவானி தேவி கலந்துகொண்டார். இவர் நிச்சயம் வெற்றிபெற்று பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இன்று அதிகாலை நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் துனிஷியா வீராங்கனை பென் அசிசியை பவானி தேவி எளிதில் வீழ்த்தினார்.

vaal veerankanai

இதனால் இந்திய ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஆனால் 2ஆவது சுற்றில் தோல்வியடைந்தார். 2ஆவது சுற்று போட்டியில் உலக தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள பிரான்ஸ் வீராங்கனை மனோன் புரூனட்டை பவானிதேவி எதிர்கொண்டார். இதில் மனோன் புரூனட் எளிதில் வெற்றிபெற்றார்.

சென்னையைச் சேர்ந்த பவானிதேவி ஒலிம்பிக் வாள் சண்டையில் களமிறங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் ஏற்கெனவே பெற்றிருந்தார். இந்நிலையில் தன்னுடைய தோல்வி குறித்து ட்விட்டர் பக்கத்தில் பவானி தேவி உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.

vaal veerankanai

அதில் இது மிகப் பெரிய நாள் உற்சாகமாகவும் உணர்வுபூர்வமாகவும் உணர்கிறேன். ஒலிம்பிக் வாள்வீச்சு முதல் போட்டியில் நாடியா அசிசீயை 15/3 என்ற கணக்கில் வென்றேன். இதன் மூலம் ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் வென்ற முதல் இந்தியா வீராங்கனையானேன்.

எனது இரண்டாவது போட்டியில், வாள்வீச்சு போட்டியில் உலக தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மனோன் புரூனெட்டிடம் 7/15 என்ற கணக்கில் தோல்வி அடைந்தேன். நான் எனது சிறந்த ஆட்டத்தை அளித்தேன். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.எல்லா முடிவுகளுக்கு ஒரு ஆரம்பம் இருக்கிறது.

bhavani devi

நான் தொடர்ந்து பயிற்சி எடுத்து பிரான்ஸில் நடக்கும் அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று எனது நாட்டை பெருமையடைய செய்வேன். அடுத்த ஒலிம்பிக்கில் கூடுதல் வலியுடன் வருவேன். எனது பயிற்சியாளர்கள், பெற்றோர்கள், இந்திய மற்றும் தமிழக மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என பவானி தேவி பதிவிட்டிருக்கிறார்.



newstm.in

Tags:
Next Story
Share it