“காமராஜருக்கு பிறகு நல்ல முதல்வரை பார்க்க முடியவில்லை” : விஜய் தந்தை அதிரடி கருத்து!!
“காமராஜருக்கு பிறகு நல்ல முதல்வரை பார்க்க முடியவில்லை” : விஜய் தந்தை அதிரடி கருத்து!!

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய ‘மாநாடு’ படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அதில் இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார்.
அப்போது, கர்ணம் தப்பினால் மரணம் என்பது போல் உள்ள கதை தான் 'மாநாடு'. இதன் மூலம் புதிய ஜோனரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார் வெங்கட் பிரபு. இப்படத்தில் வரும் மத அரசியல் காட்சி இந்தியாவையும், வாரிசு அரசியல் காட்சி தமிழ் நாட்டையும் இணைத்துள்ளது என்றார்.
' மாநாடு ' படம் சிம்புவை நல்ல உயரத்திற்கு கொண்டுபோய் உள்ளது. படத்தின் கதாநாயகன் சிம்பு இந்த நிகழ்ச்சிக்கு வராதது ஏன் என தெரியவில்லை. படப்பிடிப்பு இருந்தாலும் இங்கு அவர் வந்திருக்க வேண்டும், அவர் வராதது எனது மனதுக்கு கடினமாக இருக்கிறது.

தயாரிப்பாளருக்காக அவர் வந்திருக்க வேண்டும். நடிகர்கள் வெற்றி வந்தவுடன் மாறிவிடக் கூடாது, படப்பிடிப்பில் நடந்து கொண்டதை போலவே, படம் வெளிவந்த பிறகும் இருந்தால் தான் நடிகர்களுக்கு வெற்றி தொடரும் என்று கூறினார்.
வெற்றி வந்தாலும் தாழ்மையுடன் இருக்க வேண்டும் என, என் பிள்ளைக்கு கற்றுக் கொடுத்துள்ளேன். அதுபோல சுரேஷ் காமாட்சி அடக்கத்துடன் இருக்கிறார். தீப்பெட்டியில் உரசினால் தீக்குச்சிக்கு தான் எரியும், பெட்டி எரியாது. காரணம் திக்குச்சியின் மண்டைக் கனம் என்று பேசினார்.

3 படங்களில் முதலமைச்சராக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. படத்தில் முதலமைச்சர் கதாபாத்திரம் நல்லவராக இருப்பதை பலரால் ஏற்க முடியவில்லை. ஏனென்றால் காமராசருக்கு பிறகு நல்ல முதலமைச்சரை நாம் பார்க்க முடியவில்லை என்று அதிரடியாக பேசினார்.
newstm.in

