எனக்கு வேற வழி தெரியல மக்களே.. காதலனை அறிமுகப்படுத்திய பிரபல சீரியல் நடிகை !!
எனக்கு வேற வழி தெரியல மக்களே.. காதலனை அறிமுகப்படுத்திய பிரபல சீரியல் நடிகை !!

தற்போது திரைப்படங்களை போலவே சீரியல்களுக்காக ப்ரோமோ மற்றும் டீசர்களை சேனல்கள் வெளியிட்டு வருகின்றன. அதோடு மட்டுமல்லாமல் சீரியலில் வரும் ரொமாண்ஸ் காட்சிகளில் திரைப்பட பின்னணி இசைகளை வெளியிட்டு மக்களை கவர்ந்து வருகின்றனர்.
அனைத்து சேனல்களிலும் தற்போது வரும் புதிய சீரியல்களில் கேரக்டர்கள் மீது ரசிகர்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சுவாரசியத்தை ஏற்படுத்தி அதை அதிகம் ரசிகர்களை பார்க்க வைப்பதற்காக வெள்ளித்திரையை போலவே சின்னத்திரையிலும் இந்த யுக்தி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலின் ப்ரமோ வீடியோ வெளியாகி கடும் விமர்சனத்தை சந்தித்தது. ப்ரமோ வீடியோவில் இந்த சீரியலில் வெற்றி என்ற ஹீரோ கேரக்டரில் நடித்து வரும் வினோத் பாபு, நாயகி அபிநயாவிற்கு (நடிகை பவித்ரா ஜனனி) கோவிலில் வைத்து கட்டாய தாலி கட்டுவது போல காட்டப்பட்டது.
வேறு ஒரு சூழலுக்கு தன் பக்க நியாயத்தை விளக்க இந்த செயலை ஹீரோ செய்வது போல காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த சீரியல் நாயகியான நடிகை பவித்ரா ஜனனிக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் விஜய் டிவியின் ஆஃபிஸ் சீரியலில் அறிமுகமாகி மெல்ல திறந்தது கதவு, ராஜா ராணி, லக்ஷ்மி வந்தாச்சு மற்றும் சரவணன் மீனாட்சி சீசன் 2 & 3 மற்றும் ஈரமான ரோஜாவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் சோஷியல் மீடியாவான இன்ஸ்டாவில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நடிகை பவித்ரா ஜனனியை ஃபாலோ செய்து வரும் நிலையில், அடிக்கடி தனது போட்டோ ஷூட் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை இவர் ஷேர் செய்வது வழக்கம். இதனை பார்க்கும் அவரது ரசிகர்கள் பலர் கமெண்ட்ஸ் செய்து நடிகையை உற்சாகப்படுத்துவார்கள்.
இதனிடையே இன்ஸ்டா ரீல் ஒன்றில் தனது ஆண் நண்பரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அந்த பதிவில், Meet my boy frend Mr.Shrek என்று கேப்ஷன் கொடுத்து இன்ஸ்டா ரீலில் இருக்கும் Shrek is love என்ற எஃபெக்டை பயன்படுத்தி பொம்மை ஒன்றுடன் ரீல் செய்து உள்ளார். இந்த வித்தியாசமான மற்றும் வேடிக்கையான ரீலை பார்த்த அவரது ரசிகர்கள் ஜாலியாக பல கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
என்ன கடைசியில் இப்படி commit ஆகிடீங்க என பலரும் ஜாலியாக அவரை கலாய்த்து வருகின்றனர்.
newstm.in

