நான் பார்த்துக்கொள்கிறேன், போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் : ரஜினிகாந்த்
தனக்கென தனியாக போலீஸ் பாதுகாப்பு எதுவும் வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் நுண்ணறிவு பிரிவு காவல் அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசிய பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்துக்கும், அவரது வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுவருகிறது.

தனக்கென தனியாக போலீஸ் பாதுகாப்பு எதுவும் வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் நுண்ணறிவு பிரிவு காவல் அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.
துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசிய பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்துக்கும், அவரது வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் காவல்துறை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது, தனக்கு வழங்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பையும், வீட்டுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பையும் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தனக்கென தனியாக பாதுகாப்பு வேண்டாம் என ரஜினிகாந்த் கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து காவல்துறை இயக்குனரிடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் காவல் அதிகாரி திருநாவுக்கரசு ரஜினிகாந்திடம் கூறியதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

