Theme Check

விராட் கோலியை அவுட்டாக்க தெரியலை.. மொயின் அலி !

விராட் கோலியை அவுட்டாக்க தெரியலை.. மொயின் அலி !

விராட் கோலியை அவுட்டாக்க தெரியலை.. மொயின் அலி !
X

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. இந்த பயணத்தில் இரு அணிகளும் 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது.

முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் பிப்ரவரி 5 முதல் 9ம் தேதி வரையும், பிப்ரவரி 13 முதல் 17ம் தேதி வரையும் நடைபெறவுள்ளன. அடுத்த இரு போட்டிகளும் அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரை கைப்பற்றிய உற்சாகத்தில் இந்திய அணி உள்ளது. அதேபோன்று இங்கிலாந்து அணியும் சமபலத்துடன் வலுவாக உள்ளது.

இந்நிலையில் இந்திய சுற்றுபயணம் குறித்து இணையதளத்துக்கு பேட்டியளித்த இங்கிலாந்து வீரர் மொயின் அலி, விரோட் கோலி ஒரு அற்புதமான பேட்ஸ்மேன், உலகத்தரம் வாய்ந்தவர். அவரை எப்படி அவுட்டாக்குவது என தெரியவில்லை. ஏனென்றால் அவருக்கு பலவீனமே இல்லை. ஆனால் எங்களிடம் திறமை வாய்ந்த பவுலர்கள் இருக்கிறார்கள் என கூறினார்.

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விராட் கோலி தலைமையில் மொயின் அலி விளையாடி வருகிறார். இது குறித்து கூறிய அவர், விராட் கோலி பிரமாதமான மனிதர், என்னுடைய நண்பர். நாங்கள் இருவரும் கிரிக்கெட் குறித்து அவ்வளவாக பேசமாட்டோம் என தெரிவித்தார்.

newstm.in

Tags:
Next Story
Share it