Theme Check

“தோனியின் தலையீடு பிடிக்கவில்லை”!

“தோனியின் தலையீடு பிடிக்கவில்லை”!

“தோனியின் தலையீடு பிடிக்கவில்லை”!
X

ஐபிஎல் நடிப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே சற்று தடுமாறி வருகிறது.

கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் பேட்டிங்கில் தடுமாற்றம் இருந்ததால் 131 ரன்களை மட்டுமே எடுத்தது. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 210 ரன்களை அடித்தும் அதனை டிஃபண்ட் செய்ய முடியவில்லை.

இதனால் மீண்டும் தோனியே கேப்டன் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கோரி வருகின்றனர். இந்நிலையில் ரவீந்திர ஜடேஜாவை, தோனி சுதந்திரமாக செயல்பட விடவில்லை என முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.

ajay jadeja dhoni

தோனிக்கு என்னை விட பெரிய ரசிகன் இருக்க முடியாது. ஆனால் பதவியில் இருந்து விலகிய பின்பு அவர் கேப்டன்சியில் அதிகாரம் செலுத்துவது சரியில்லை. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தோனி தான் முடிவுகளை எடுத்தார் என அவர் கூறியுள்ளார்.

ajay jadeja dhoni

அது கடைசி லீக் போட்டியாக இருந்திருந்தால், நெருக்கடியான சூழலுக்காக தோனி கையாண்டார் எனக்கூறலாம். ஆனால் 2வது போட்டியிலேயே இப்படி செய்தால், அது ஜடேஜாவின் நம்பிக்கையை சிதைக்கும் என அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.

தோனியின் முடிவுகளை குறைக்கூறவில்லை. ஆனால் அவர் முடிவு எடுப்பது ஜடேஜாவை வளர்த்துவிடாது என தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it