Theme Check

“100 முறை விழுந்து எழுந்தேன்” : சமந்தாவின் பனிச்சறுக்கு அனுபவம்!!

“100 முறை விழுந்து எழுந்தேன்” : சமந்தாவின் பனிச்சறுக்கு அனுபவம்!!

“100 முறை விழுந்து எழுந்தேன்” : சமந்தாவின் பனிச்சறுக்கு அனுபவம்!!
X

சுவிட்சர்லாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள நடிகை சமந்தா தனது பனிச்சறுக்கு அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் நடிகை சமந்தாவும் நாகசைதன்யாவும் விவாகரத்து குறித்து அறிவித்தனர். அதைத் தொடர்ந்து சமந்தா ரிஷிகேஷில் தன்னுடைய விடுமுறையை கழித்தார்.

அதனைத் தொடர்ந்து சமந்தா தன்னுடைய தோழி ஷில்பா ரெட்டியுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோவை தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

samantha

இன்ஸ்டாகிராமில், பனிச்சறுக்கு பயிற்சியாளருடன் இருக்கும் படத்தை பகிர்ந்து கொண்டு அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். பனிச்சறுக்கின் போது 100 முறை விழுந்து ஒவ்வொரு முறையும் எழுந்தேன். இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

எனது அனுபவத்தை உற்சாகமாகவும் அச்சுறுத்தலாகவும் மாற்றியதற்கு நன்றி. என்னைப் பயிற்றுவித்ததற்காக அன்பான கேத்க்கு ஒரு பெரிய கூக்குரல் தெரிவித்துள்ளார்.

சமந்தா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் கதாநாயகியை மையமாகக் கொண்ட 'யசோதா' என்னும் பான் இந்தியா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

newstm.in

Next Story
Share it