Theme Check

மறுபிறவி எடுத்து வந்துள்ளேன்.. பாகிஸ்தானில் 29 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த இந்தியர் விடுதலை..!

மறுபிறவி எடுத்து வந்துள்ளேன்.. பாகிஸ்தானில் 29 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த இந்தியர் விடுதலை..!

மறுபிறவி எடுத்து வந்துள்ளேன்.. பாகிஸ்தானில் 29 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த இந்தியர் விடுதலை..!
X

பாகிஸ்தானில் 29 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விடுதலையான காஷ்மீரைச் சேர்ந்தவர் நேற்று தனது சொந்த கிராமத்திற்கு திரும்பினார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் உள்ள மெக்வால் கிராமத்தைச் சேர்ந்தவர் குல்தீப் சிங் (53). இவர், கடந்த 1992ம் ஆண்டு உளவு பார்த்ததாக பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து குல்தீப் சிங், உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். 29 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த அவர் கடந்த வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.
Man returns to India after 29 years of Jail in Pakistan, Kuldeep gets  rousing welcome in Kathua J&K - The Right Mag
நேற்று சொந்த கிராமத்திற்கு வந்த குல்தீப் சிங்கை அவரது குடும்பத்தினர் வரவேற்றனர். குல்தீப் சிங் கூறுகையில், “1992ல் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டேன்.

மூன்று வருடங்கள் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டேன். நான் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்ததன் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டேன். உயிருடன் சொந்த நாட்டிற்குச் செல்வதை நினைத்துக்கூட பார்த்ததில்லை. மறுபிறவி எடுத்து வந்துள்ளேன்” என்றார்.

Next Story
Share it