Theme Check

‘இசட் பிரிவு’ பாதுகாப்பை ஏற்க வலியுறுத்துகிறேன் - நாடாளுமன்றத்தில் அமித்ஷா அறிக்கை..!!

‘இசட் பிரிவு’ பாதுகாப்பை ஏற்க வலியுறுத்துகிறேன் - நாடாளுமன்றத்தில் அமித்ஷா அறிக்கை..!!

‘இசட் பிரிவு’ பாதுகாப்பை ஏற்க வலியுறுத்துகிறேன் - நாடாளுமன்றத்தில் அமித்ஷா அறிக்கை..!!
X

அசாதுதீன் ஓவைசியின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார்.

அதில், உள்துறை அமைச்சகம் உடனடியாக மாநில அரசிடம் இருந்து அறிக்கை எடுத்தது.தாக்குதல் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத 2 நபர்கள் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். ஒவைசியின் வாகனத்தின் மீது 3 குண்டுகள் பாய்ந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை 3 பேர் நேரில் பார்த்துள்ளனர்.

ஓவைசிக்கு ‘இசட் பிரிவு’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, ஆனால் அவர் ஏற்க மறுத்துவிட்டார். ஒன்றிய அரசு வழங்கும் ‘இசட் பிரிவு’ பாதுகாப்பை ஏற்க வலியுறுத்துகிறேன் என்றார்.

தொடர்ந்து மாநிலங்களவை நாளை பிப்ரவரி 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Next Story
Share it