Theme Check

நான் சீருடை அணிந்தே சென்றேன்.. ஹிஜாப் விவகாரத்தில் நடிகை குஷ்பு குற்றச்சாட்டு !

நான் சீருடை அணிந்தே சென்றேன்.. ஹிஜாப் விவகாரத்தில் நடிகை குஷ்பு குற்றச்சாட்டு !

நான் சீருடை அணிந்தே சென்றேன்.. ஹிஜாப் விவகாரத்தில் நடிகை குஷ்பு குற்றச்சாட்டு !
X

ஹிஜாப் அணிவது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம், ஆனால் பள்ளியின் வாசல் வரை மட்டுமே அணியலாம் என்று நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரி, மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடைவிதித்தது. இதை எதிர்த்து மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதனால் மற்றொரு பிரிவு மாணவிகள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.

இதனால் மாணவ- மாணவிகள் சீருடைகள் அணிய கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்த விவகாரம் தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

kuspu

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி வார்ட் எண் 110ல் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து வள்ளுவர் கோட்டம் வைகுண்டபுரம் பகுதியில் பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் குஷ்பூ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, பர்தா அணிவது இஸ்லாமியப்பெண்களின் விருப்பம், பள்ளியின் வாசல் வரை அணியலாம். ஆனால் பள்ளிக்கூடத்திற்கு உள்ளே அணிந்து வர வேண்டாம் என்கிறோம். பள்ளி வளாகத்தில் காவி துண்டு, நீல தொண்டு, போன்ற எந்த அடையாளமும் இருக்கக்கூடாது என்றும் அவர் ஹிஜாப் அணிவது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்றும் கூறினார்.

kuspu

தானும் ஒரு இஸ்லாமிய பெண்தான் என்று கூறிய குஷ்பு, தான் ஹிஜாப் அணிந்து கல்விநிறுவனங்களுக்குச் சென்றதில்லை என்றும் கூறினார். சீருடை அணிந்தே சென்றேன். பள்ளிக்கூடத்திற்குள் பர்தா அணிவது தவறு என்றால் காவி துண்டு, நீல துண்டு அணிந்து வருவதும் தவறு தான். பள்ளியில் மத அடையாளத்தை புகுத்த வேண்டாம். பள்ளிகளுக்கு சீருடையுடன்தான் செல்லவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

newstm.in

Next Story
Share it