Theme Check

ஓரிரு நாளில் திரும்பி வருவேன்.. கைலாசா அதிபர் அறிக்கை..!

ஓரிரு நாளில் திரும்பி வருவேன்.. கைலாசா அதிபர் அறிக்கை..!

ஓரிரு நாளில் திரும்பி வருவேன்.. கைலாசா அதிபர் அறிக்கை..!
X

கைலாசா நாட்டின் அதிபர் நித்தியானந்தா கோமா நிலையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வரும் நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நித்தியானந்தா.

அதில், “அன்பான பக்தர்கள் மற்றும் சீடர்களே, சமாதியில் இருந்து சமாதி பற்றி மேலும் ஒரு நேரடி கவரேஜ் வெளிப்பாடுகளை தருகிறேன். பரமசிவனின் அறிவு மற்றும் சக்திகளின் மேலும் உயர்ந்த வெளிப்பாடுகளுக்கு உடல் சீரமைக்கிறது.

அதிர்ஷ்டவசமாக, எனது முழு உடலும் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளது. பல நோயறிதல் முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன. நோயல்ல என்பதை நிரூபிக்க எல்லாம் நன்றாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

எனது மூளை அலைகள் மற்றும் இதய செயல்பாடு தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு, முழு ஐசியூ அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு, கோமா நிலையில் இல்லை என்பதை நிரூபிக்கிறது. நிச்சயம் ஓரிரு நாளில் திரும்பி வருவேன்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story
Share it