Theme Check

பொதுச்செயலாளர் பதவிக்கு நான் போட்டியிடுவேன்.. அதிமுக முன்னாள் அமைச்சர் பகீர் !!

பொதுச்செயலாளர் பதவிக்கு நான் போட்டியிடுவேன்.. அதிமுக முன்னாள் அமைச்சர் பகீர் !!

பொதுச்செயலாளர் பதவிக்கு நான் போட்டியிடுவேன்.. அதிமுக முன்னாள் அமைச்சர் பகீர் !!
X

அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே எம்.ஜி.ஆர் உடன் நான் பயணித்திருக்கிறேன். ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையில் 5 ஆண்டுகாலம் அமைச்சராக இருந்திருக்கிறேன்.

அதன்பிறகு சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். தற்போது அதிமுகவில் நடக்கும் அனைத்து விஷயங்களும் என்னை பெரிதும் வாட்டுகின்றன. ஏனெனில் இந்த இயக்கத்தை வளர்த்தவர்களுக்கு தான் மிகப்பெரிய துயரம் ஏற்படும்.

ops eps

பெரியகுளம் தொட்டு எம்.ஜி.ஆர் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அவருடன் பயணித்துள்ளேன். எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின்னர் ஜெயலலிதா அதிமுகவை நடத்த முற்பட்ட போது, திருச்சி மாவட்டத்தில் இருந்து ஜெயலலிதாவை ஆதரித்த ஒரேவொரு பொதுக்குழு உறுப்பினர் நான் மட்டும் தான். இவரது காலம் என்பது மிகவும் சிறப்பாக இருந்தது. சொன்னவற்றை எல்லாம் செய்து காட்டினார்.

இவரது மறைவிற்கு பின்னர் இரட்டை தலைமை வந்தது. நானெல்லாம் மகிழ்ச்சி அடைந்தேன். ஏனெனில் 1985ல் சத்யா ஸ்டூடியோவில் இரண்டு நாட்கள் பொதுக்குழு நடைபெற்றது. அதில் செயலாளர்களுக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர், என்னுடைய காலத்திற்கு பின்னர் என்றாவது ஒருநாள் ஒரு தொண்டன் இந்த இயக்கத்தை தலைமையேற்று நடத்துவான் என்று சொன்னால் அன்று தான் என்னுடைய ஆத்மா சாந்தியடையும் என்று கூறினார்.

ops eps

அதை நினைவில் கொண்டு இரட்டை தலைமையில் இரண்டு தொண்டர்கள் பதவிக்கு வந்த போது பெரிதும் மகிழ்ந்தேன். தலைவரின் வாக்கு பலித்து விட்டது என்று. இரட்டை தலைமையை முடிவு செய்தது நீங்களே. இதைப் பற்றி தொண்டர்கள் யாரிடமும் கேட்கவில்லை. தற்போது ஒற்றை தலைமை வேண்டும் எனக் கூறிக் கொண்டு ஒருவரை வெளியே போக வேண்டும் என்றால் இது நியாயமா?.

நான் யாருக்கும் ஆதரவு இல்லை. பொதுச்செயலாளர் பதவிக்கு நானே கூட போட்டியிடுவேன்" என்று முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்தார்.

newstm.in

Next Story
Share it