Theme Check

“நான் உங்களை மிஸ் செய்வேன் வார்னே” : சச்சின் உருக்கம்!!

“நான் உங்களை மிஸ் செய்வேன் வார்னே” : சச்சின் உருக்கம்!!

“நான் உங்களை மிஸ் செய்வேன் வார்னே” : சச்சின் உருக்கம்!!
X

ஷேன் வார்னே மறைவு குறித்து நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வேதனை தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டில் சச்சின்வார்னே காம்பினேஷ் எவர்கிரீன். 90ஸ் கிட்ஸ்களுக்கு இப்போதும் அது பசுமையாக நினைவிருக்கும். சச்சின் விக்கெட்டை எடுக்க வார்னே கடுமையாக போராடுவார். அதேபோல வார்னே பந்தில் சச்சின் சிக்ஸர் விளாசுவார்.

இந்தியா - ஆஸ்திரேலியா மேட்ச் என்றாலே சச்சின் - ஷேன் வார்னே தான் ஹைலைட். கிரிக்கெட் உலகில் அனைவராலும் நேசிக்கப்படுபவர்கள் வெகு சிலர். அப்படிப்பட்ட அரிய வீரர்களில் சச்சினுக்கும் சரி, வார்னேவுக்கும் சரி தனி இடம் உண்டு.

warne-sachin

சச்சினுடன் மிக நல்ல நட்பு கொண்டிருந்தார் வார்னே. சச்சினும் கூட வார்னேவுடன் மிக இயல்பாக பழகி வந்தார். இந்நிலையில் வார்னே இறப்பு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக சச்சின் டெண்டுல்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நம் இருவருக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டிகளும் சரி, மைதானத்திற்கு வெளியிலான நட்பும் சரி பொக்கிஷம் போல பாதுகாக்கப்பட வேண்டியவை. இந்தியாவில் உங்களுக்கு சிறப்பு இடம் எப்போதும் இருந்தது.

இந்திய ரசிகர்களின் மனதில் உங்களுக்கு தனி இடம் இருந்தது. ரொம்ப சீக்கிரம் போயிட்டீங்க என்று சச்சின் டெண்டுல்கர் உருக்கமாக கூறியுள்ளார்.


newstm.in

Next Story
Share it