வாழ்க்கையில் திருமணம் என்ற தவறை மட்டும் செய்யமாட்டேன்.. சிம்பு நடிகை விரக்தி !!

வாழ்க்கையில் திருமணம் என்ற தவறை மட்டும் செய்யமாட்டேன்.. சிம்பு நடிகை விரக்தி !!

வாழ்க்கையில் திருமணம் என்ற தவறை மட்டும் செய்யமாட்டேன்.. சிம்பு நடிகை விரக்தி !!
X

தமிழில் ‘காதல் அழிவதில்லை’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் சார்மி. இதையடுத்து ‘லாடம்’ ‘பத்து எண்றதுக்குள்ள’ போன்ற படங்களில் நடித்துள்ள அவர், தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். கவர்ச்சி வேடங்களிலும் துணிச்சலாக நடித்து வந்தார்.

தமிழ் திரையுலகில் பெரும் வரவேற்பு இல்லையென்றாலும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகையானார். தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இதனால் தயாரிப்பாளராக மாறி இருக்கும் சார்மி, தற்போது பட தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில், இவர் தற்போது விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'லிகர்' படத்தை தயாரித்து வருகிறார். கடந்த சில நாட்களாக, நடிகை சார்மி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்தி பரவியது. அதனைவைத்து பல்வேறு கிசுகிசுக்களும் உலாவின.

இந்தநிலையில் பல்வேறு ஊகங்களுக்கு இடம் அளிக்காமல் நடிகை சார்மி நச்சுனு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து நடிகை சார்மி கூறியதாவது, தற்போது எனது வேலையில் சிறந்த ஒரு கால கட்டத்தில், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தவறான முடிவை எனது வாழ்க்கையில் எப்போதும் எடுக்க மாட்டேன். போலியாக எழுதுபவர்கள், வதந்திகள் ஆகியவற்றுக்கு குட் பை, சுவாரஸ்யமான கதைகளை உருவாக்குவதில் நீங்கள் சிறந்தவர்கள் என தெரிவித்துள்ளார்.


newstm.in

Tags:
Next Story
Share it