Theme Check

நான் ஹிந்தி பேச மாட்டேன்.. பாஜக தலைவர் அண்ணாமலை..!

நான் ஹிந்தி பேச மாட்டேன்.. பாஜக தலைவர் அண்ணாமலை..!

நான் ஹிந்தி பேச மாட்டேன்.. பாஜக தலைவர் அண்ணாமலை..!
X

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “நான் ஹிந்தி பேச மாட்டேன்; உங்கள் வேலைக்கு தேவை என்றால் ஹிந்தி கற்றுக்கொள்ளுங்கள். ஹிந்தி திணிப்பை நாங்களும் ஏற்கவில்லை. ஹிந்தி திணிப்பை தமிழ்நாடு பாஜக எதிர்த்து கொண்டுதான் உள்ளது.

2 வது தேசிய கல்வி கொள்கையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஹிந்தி திணிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கையில் ஹிந்தி என்பது விருப்பப் பாடமாக மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்தி மொழி திணிப்பை தமிழ்நாடு பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்த கருத்தை வரவேற்கிறோம்.

கடந்த 2010-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸுடன் திமுக கூட்டணியில் இருந்தபோது சி.யு.சி.ஈ.டி(CUCET) தேர்வு கொண்டுவரப்பட்டது.

காங்கிரஸ் - திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நுழைவுத் தேர்வை, திமுக அரசு எப்படி குறை சொல்ல முடியும்..?” என்று கேள்வி எழுப்பினார்.

Next Story
Share it