Theme Check

பிரதமர் மோடி நேரில் வந்து கூறினால் தான் ஒப்புக்கொள்வேன்.. கிராமவாசியால் அதிர்ந்த அதிகாரிகள் !!

பிரதமர் மோடி நேரில் வந்து கூறினால் தான் ஒப்புக்கொள்வேன்.. கிராமவாசியால் அதிர்ந்த அதிகாரிகள் !!

பிரதமர் மோடி நேரில் வந்து கூறினால் தான் ஒப்புக்கொள்வேன்.. கிராமவாசியால் அதிர்ந்த அதிகாரிகள் !!
X

கொரோனா 2ஆவது இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்புகளையும் அழிவையும் ஏற்படுத்தியது. அதன்பின்னர், பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கு விதித்து எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, பின்னர் கொரோனா குறையத்தொடங்கியது. தற்போது ஓரளவுக்கு கட்டுக்குள் வந்ததால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மத்தியபிரதேச மாநில அரசு, கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. சுகாதாரத் துறையினர் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்துகின்றனர்.

vaccine

இந்நிலையில், தார் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமமான கிக்கார்வாசுக்கு, தடுப்பூசி போடும் சுகாதார குழுவினர் சென்றனர். அங்கே, கிராமத்தினர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அக்கிராமத்தில் ஒருவர் மட்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்துவிட்டார்.

சுகாதாரத்துறையினர் எவ்வளவு கூறியும் அந்நபர் கேட்கவில்லை. இறுதியாக அவரிடம், யார் வந்தால் நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வீர்கள்? என்று சுகாதார குழுவினர் கேட்டனர். அதற்கு அந்த நபர் ஆரம்பத்தில், ஒரு மூத்த அதிகாரி வந்தால் தடுப்பூசி போட்டுக்கொள்வேன் என்றார்.

vaccine

உடனே, அவர் கேட்டப்படி உயர் அதிகாரி ஒருவரை அழைத்துவந்தனர். அந்த அதிகாரி வந்ததும் தடுப்பூசி போட்டுக்கொள்ள கூறியப்போது, பிரதமர் மோடியை வரச்சொல்லுங்கள் மீண்டும் கூறியுள்ளார். இதனை கேட்டு அங்கிருந்த ஒட்டுமொத்த அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரிடம் எவ்வளவோ வற்புறுத்திப் பேசியும் அவர், தடுப்பூசி போட்டுக்கொள்ள ஒப்புக்கொள்ளவில்லை.

இதனால், சுகாதார குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இது குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it