Theme Check

ஊழல் வழக்கில் கைதான ஐஏஎஸ் அதிகாரி.. மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

ஊழல் வழக்கில் கைதான ஐஏஎஸ் அதிகாரி.. மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

ஊழல் வழக்கில் கைதான ஐஏஎஸ் அதிகாரி.. மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
X

பஞ்சாப்பில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து அக்கட்சி அரசு நடந்து வருகிறது. இந்த அரசில் ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் பொப்லி என்பவர் கடந்த 20ஆம் தேதி ஊழல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து, அவரது வீட்டிலும் கண்காணிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் அதிக அளவிலான வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து ஆயுத சட்டங்களின் கீழ் வழக்கு ஒன்றும் பதிவானது. இந்த சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

fdg

இந்நிலையில், பொப்லியின் மகனான கார்த்திக் பொப்லி இன்று மதியம் 1.30 மணியளவில் வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார். அதிகாரிகள் விசாரணைக்கு சென்றபோது, அவரது முன்னிலையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தற்கொலை என அதிகாரிகள் கூறுகின்றனர். எனினும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்று அதிகாரி கூறியுள்ளார்.

தற்கொலை செய்துக்கொண்ட கார்த்திக் குடும்பத்தினரின் வாக்குமூலம் பெறப்படும் என்றும் கூறியுள்ளார். ஆனால், கார்த்திக்கின் குடும்பத்தினரோ அதிகாரிகள் அவரை சுட்டு கொன்று விட்டனர் என கூறியுள்ளனர். சஞ்சயின் வீட்டில் இருந்து 12 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி கைப்பற்றப்பட்டு உள்ளது. அவற்றில் 9 தங்க கட்டிகள், 49 தங்க பிஸ்கட்டுகள், 12 தங்க நாணயங்கள், 3 வெள்ளி கட்டிகள், 18 வெள்ளி நாணயங்கள், 4 ஐபோன்கள் மற்றும் ரூ.3.5 லட்சம் பணமும் அடங்கும். இந்த சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it