Theme Check

ஐசிசி சிறந்த டி20 அணி.. பாபர் ஆசம் கேப்டன் ! இந்திய வீரர்களில் ஒருவர் கூட இல்லை !!

ஐசிசி சிறந்த டி20 அணி.. பாபர் ஆசம் கேப்டன் ! இந்திய வீரர்களில் ஒருவர் கூட இல்லை !!

ஐசிசி சிறந்த டி20 அணி.. பாபர் ஆசம் கேப்டன் ! இந்திய வீரர்களில் ஒருவர் கூட இல்லை !!
X

2021 ஐசிசி டி20 உலகக்கோப்பை சிறந்த அணியை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த அணிக்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றுடன் முடிந்தது. இதில், ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது. நியூசிலாந்து அணி இன்னும் ஒருமுறை கூட டி20 உலகக்கோப்பையை வெல்லவில்லை. நேற்று இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து அந்த வாய்ப்பை நழுவவிட்டனர்.
t20 won
இந்நிலையில் ஐசிசி டி20 உலகக்கோப்பை 2021 சிறந்த அணியை அறிவித்துள்ளது. அதாவது டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களை வைத்து ஐசிசி ஒரு அணியை தேர்வு செய்து அறிவிக்கும். அதில் இந்தாண்டு ஆச்சரியகரமாக ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை.

ஐசிசி அணியில் பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் ஆசம் கேப்டனாக இருக்க வார்னர், பட்லர் தொடக்க வீரர்கள், பாபர் ஆசம் 1 டவுன். இலங்கையின் அசலங்கா அடுத்ததாக இடம்பெற்றுள்ளார். மார்க்ரம், மொயின் அலி, இலங்கையின் ஹசரங்கா, ஆடம் ஜாம்ப்பா, ஹேசில்வுட், போல்ட், நார்ட்யே ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். 12வது வீரராக பாகிஸ்தானின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரீடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐசிசி சிறந்த டி20 அணி: பாபர் ஆசம்(கேப்டன்), வார்னர், பட்லர், அசலங்கா, மார்க்ரம், மொயின் அலி, ஹசரங்கா, ஆடம் ஜாம்ப்பா, ஹேசில்வுட், போல்ட், நார்ட்யே


newstm.in

Tags:
Next Story
Share it