இன்று வெளியாகிறது ஐசிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!!
இன்று வெளியாகிறது ஐசிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!!

ஐசிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாகிறது.
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியாகியது. இதனையடுத்து மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில், ஐ.சி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை www.cisce.org, results.cisce.org என்ற இணையதளம் மூலமும், பள்ளிகள் வாயிலாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக காலதாமதம் ஆவதால் மாணவர்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மற்ற தேர்வு முடிவுகள் அனைத்தும் வெளியாகியுள்ள நிலையில் உயர்கல்விக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது.
ஆனால் சிபிஎஸ்இ முடிவுகள் வெளியாகாததால் மாணவர்கள் சேர்க்கையில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதனால் விரைவாக சிபிஎஸ்இ முடிவுகளை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
newstm.in

