ஐடி ரெய்டு பரபரப்பு.. நடிகர் விஜய் உறவினர் வீட்டில் சோதனை..!
ஐடி ரெய்டு பரபரப்பு.. நடிகர் விஜய் உறவினர் வீட்டில் சோதனை..!

‘மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோ இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் தொடர்ச்சியாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது, நடிகர் விஜய்யின் உறவினரும், பிரபல தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

நேற்றைய தினம் ஜியோமி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மொபைல் உதிரி பாகங்கள் ஏற்றுமதி - இறக்குமதி கையாள்வதில் சேவியர் பிரிட்டோவின் நிறுவனங்கள் ஈடுபடுவதால் அவரது வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இவர் நடிகர் விஜய்க்கு உறவினர் ஆவார். இவர் திரைப்படத் தயாரிப்பாளர் மட்டுமின்றி திரைப்பட விநியோகஸ்தராவார். ஏற்கனவே ஒரு கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றியவர். நடிகர் விஜயின் தேவா, செந்தூரப்பாண்டி போன்ற திரைப்படங்களுக்கு தயாரிப்பாளராக பணியாற்றினார். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜயின் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
‘மாஸ்டர்’ திரைப்பட தயாரிப்பாளரும், நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோ இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

