Theme Check

ஆட்சிக்கு வந்தால் மதுபானம் ரூ.70க்கு விற்பனை! பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு!!

ஆட்சிக்கு வந்தால் மதுபானம் ரூ.70க்கு விற்பனை! பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு!!

ஆட்சிக்கு வந்தால் மதுபானம் ரூ.70க்கு விற்பனை! பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு!!
X

ஆட்சிக்கு வந்தால் ரூ. 70க்கு மதுபானம் விற்கப்படும் என ஆந்திர மாநில பா.. தலைவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பா.. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மாநில பா.. தலைவர் சோமு வீரராஜூ கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், ஆந்திர மாநிலத்தில் ஆளுங்கட்சி ஆதரவுடன் தரமற்ற மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.

2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பா..கவை வெற்றி பெற செய்தால் 70 ரூபாய்க்கு மதுபானங்கள் விற்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

ap bjp

மேலும் வருவாய் அதிகரித்தால் ரூ.50க்கும் மதுபானம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். பா.. தலைவர் சோமு வீரராஜூவின் இந்தப் பேச்சு ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதான் பா..கவின் தேர்தல் வாக்குறுதியா என பெண்கள் அமைப்பினர் கேள்வி எழுப்பிக் கண்டித்துள்ளனர். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பலரும் இதுகுறித்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it