Theme Check

கொரோனா நிலைபற்றி பேசினால் நான் தேசத்துரோகி ஆகிவிடுவேன்.. உ.பி பாஜக எம்.எல்.ஏ !!

கொரோனா நிலைபற்றி பேசினால் நான் தேசத்துரோகி ஆகிவிடுவேன்.. உ.பி பாஜக எம்.எல்.ஏ !!

கொரோனா நிலைபற்றி பேசினால் நான் தேசத்துரோகி ஆகிவிடுவேன்.. உ.பி பாஜக எம்.எல்.ஏ !!
X

கொரோனா நிலைபற்றி பேசினால் என்னையும் தேசத்துரோகி என்பார்கள் என உத்தரபிரதேச பாஜக எம்.எல்.ஏ ராகேஷ் ரத்தோர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்தாலும் வடமாநிலங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அங்குள்ள சில மாநிலங்களில் மருத்துவ கட்டமைப்பை இது கேள்வி எழுப்பியது. முறையான வசதிகள், மருத்துவ கட்டமைப்புகள் இல்லாததால் தான் உயிரிழப்பு அதிகரித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக உத்தரபிரதேச அரசு மீது நீதிமன்றமே கடுமையான அதிருப்தி தெரிவித்தது.

அதோடுமட்டுமல்லாமல், கொரோனா நிலைமையை உத்தரபிரதேச மாநில அரசு கையாள்வது குறித்து ஆளும் கட்சியின் சில தலைவர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஏனெனில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கொரோனாவை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கோவில்களில் பூஜை செய்தால் கொரோனா அழிந்துவிடும் என தொடர்ந்து பூஜை செய்து வருகிறார். இது பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியது.

இந்த சூழலில் உத்தரபிரதேச மாநிலம் பாஜக எம்.எல்.ஏ ராகேஷ் ரத்தோர் தற்போது அரசின் நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கூறிய அவர், அதிகம் பேசினால் தான் தேசத்துரோக குற்றச்சாட்டுகளை சந்திக்க நேரிடும் என்று அச்சம் தெரிவித்தார். கொரொனா பாதிப்புகள் அதிகரித்து, அதிக படுக்கைகள் தேவைப்பட்டாலும், நீங்கள் வசிக்கும் சீதாப்பூர் மாவட்டத்தில் ஒரு சிகிச்சை மையம்கூட ஏன் இன்னும் செயல்படவில்லை என எம்எல்ஏவிடம் கேள்வி எழுப்பினர்.

அப்போது, எங்கள் நிலை எப்படி உள்ளது என்றால், நாங்கள் எம்.எல்.ஏக்கள். அதிகம் பேசினால், நாங்களும் தேசத்துரோக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நான் என் உணர்வுகளை முன்பு தெரிவித்துள்ளேன், நான் இனி பேசாதது நல்லது என தெரிவித்தார். எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. இதை விட வேறு எதுவும் சிறப்பாக இருக்க முடியாது. நான் அரசாங்கம் அல்ல, ஆனால் அரசாங்கம் சொல்வதை சரியானது என்று உங்களுக்கு சொல்ல முடியும் எனக்கூறினார்.

newstm.in


Tags:
Next Story
Share it