மணிவண்ணன் இல்லையென்றால் நான் இல்லை.. நடிகர் சத்யராஜ் உருக்கம்.. வீடியோ !!

மணிவண்ணன் இல்லையென்றால் நான் இல்லை.. நடிகர் சத்யராஜ் உருக்கம்.. வீடியோ !!

மணிவண்ணன் இல்லையென்றால் நான் இல்லை.. நடிகர் சத்யராஜ் உருக்கம்.. வீடியோ !!
X

90-ஸ் கிட்ஸுக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர் மணிவண்ணன். சத்யராஜும், மணிவண்ணனும் பல ஹிட் திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். அதோடு அவர்களது காம்போ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர்கள் இருவரும் அடிக்கும் லுட்டிக்கு அளவே இல்லை. அவர்களின் காமெடி காட்சிகள் இணையத்தில் குவிந்து கிடக்கின்றன.

மணிவண்ணன் எழுத்து-இயக்கத்தில் 1994இல் வெளியான 'அமைதிப்படை' சத்யராஜின் நீண்ட திரை வாழ்வில் மகுடம் சூட்டிய படமாக அமைந்தது. இந்த நிலையில் மறைந்த மணிவண்ணனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, இயக்குநர் மணிவண்ணன் இல்லையென்றால் தான் இல்லை என நடிகர் சத்யராஜ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மறைந்த இயக்குநர் மணிவண்ணனின் நினைவு நாளான அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், பல்வேறு தகவல்களை கூறியுள்ளார். இயக்குநர் மணிவண்ணன் இல்லையென்றால் சத்யராஜ் இல்லை என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் மணிவண்ணனை நினைவில் வைத்துள்ளது என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

அமைதிப்படை, அமாவாசை போன்ற ஒரு வில்லன் பாத்திரத்தை இனி எனக்கு யார் தருவார் எனவும் அவர் உருக்கத்துடன் கூறியுள்ளார்.

newstm.in‘

Tags:
Next Story
Share it