Theme Check

ஓபிஎஸ் மனம் திருந்தினால் ஏற்றுக்கொள்வோம்.. முன்னாள் அமைச்சர் அழைப்பு !!

ஓபிஎஸ் மனம் திருந்தினால் ஏற்றுக்கொள்வோம்.. முன்னாள் அமைச்சர் அழைப்பு !!

ஓபிஎஸ் மனம் திருந்தினால் ஏற்றுக்கொள்வோம்.. முன்னாள் அமைச்சர் அழைப்பு !!
X

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் கலவரமாக வெடித்து தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமி அணியில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.

ஆனால் நாங்கள் தான் உண்மையான அதிமுக என கூறும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டார். இதனால் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

admk

இதனிடையே, எடப்பாடி பழனிசாமி புதிய நிர்வாகிகளை நியமித்து அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, அதிமுகவின் கழக அமைப்பு செயலாளராக பதவி பெற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை கே.கே.நகரில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பதவி கேட்காமலேயே எடப்பாடி பழனிசாமி எனக்கு கழக அமைப்பு செயலாளராக பதவி வழங்கியுள்ளார். அதிமுகவிற்கும், அவருக்கும் விசுவாசமாக செயல்படுவேன். அதிமுக தொண்டரின் புனித தலமாக கட்சித்தலைமை அலுவலகம் இருக்கிறது. அப்படிப்பட்ட இடத்தில் வன்முறை சம்பவம் நிகழ்ந்தது வருத்தமளிக்கிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வோம்.

admk

ஓபிஎஸ் ஏட்டிக்கு போட்டியாக செயல்படுவதால் எந்தவொரு பயனும் இல்லை. யார் பக்கம் கட்சி இருக்கிறது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். அதிமுகவில் சாதிய ர தியாக பதவி வழங்குவதில்லை. ஓபிஎஸ், எடப்பாடியை சந்தித்து பேசி வருத்தம் தெரிவிக்க வேண்டும். ஓ.பி.ரவீந்திரநாத்தை நீக்கியதால் அதிமுகவுக்கு எந்தவொரு இழப்பும் இல்லை. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் கட்சியின் பலத்தை நிர்ணயிக்க முடியாது. தொண்டர்களின் பலமே அதிமுக, என்று அவர் தெரிவித்தார்.

newstm.in

Next Story
Share it