Theme Check

பாஜகவில் ஷாருக்கான் இணைந்தால்... போதைப்பொருள் எல்லாம் சர்க்கரையாக மாறிவிடும்..!!

பாஜகவில் ஷாருக்கான் இணைந்தால்... போதைப்பொருள் எல்லாம் சர்க்கரையாக மாறிவிடும்..!!

பாஜகவில் ஷாருக்கான் இணைந்தால்... போதைப்பொருள் எல்லாம் சர்க்கரையாக மாறிவிடும்..!!
X

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்தில் பங்கேற்றதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்டவர்களை கடந்த 3-ந் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். தற்போது ஆர்யன்கான் மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஆர்யன்கானின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து நடிகர் ஷாருக்கான் சிறைக்குச் சென்று மகன் ஆர்யன்கானை சந்தித்து பேசினார். பின்னர், ஷாருக்கான் வீட்டில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.

இதையடுத்து வழக்கு தொடர்பான ஆதாரம் குறித்துச் சேகரிக்க வந்ததாகப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறினர். இந்நிலையில், நடிகர் ஷாருக்கான் பாஜகவில் இணைந்தால் போதை பருந்து சர்க்கரையாகிவிடும் என பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மராட்டிய மாநில அமைச்சர் சக்கன் பூஜ்பால், “சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டவர்களின் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானும் ஒருவர். நடிகர் ஷாருக்கான் மட்டும் பாஜகவில் சேர்ந்துவிட்டால் போதைப் பொருள் சர்க்கரை தூயாக மாறிவிடும்.

குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் ஒரு பெரிய அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்குப் பதில் நடிகர் ஷாருக்கானை வேட்டையாடுகிறது” என தெரிவித்துள்ளார்.

Tags:
Next Story
Share it