Theme Check

கொரோனா அதிகரித்தால் முதல்வரே பொறுப்பு.. சொல்கிறார் முன்னாள் முதல்வர்..!

கொரோனா அதிகரித்தால் முதல்வரே பொறுப்பு.. சொல்கிறார் முன்னாள் முதல்வர்..!

கொரோனா அதிகரித்தால் முதல்வரே பொறுப்பு.. சொல்கிறார் முன்னாள் முதல்வர்..!
X

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவருடைய இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “கொரோனா தொற்றால் நாட்டின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது, உருமாறிய புதிய வகை கொரோனா தொற்றான ஒமைக்ரானால் இன்னும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் காற்றில் பறக்க விடப்பட்டது. ஏற்கெனவே கொரோனா தொற்றின் முதல் இரண்டு அலையில் பெரிய அளவில் புதுச்சேரி மக்களை இழந்துள்ளோம்.
புதுச்சேரி: `பதவிக்காகப் பேரம்; நாற்காலிக்காகச் சண்டை!' - கடுகடுக்கும் முன்னாள்  முதல்வர் நாராயணசாமி | Puducherry former CM slams newly formed government
இந்த ஒமைக்ரான் தொற்றானது வேகமாக பரவக்கூடியவை. தேவையில்லாமல் புத்தாண்டு கொண்டாட்டம் என்று சொல்லி, புதுச்சேரிக்கு பல மாநிலங்களை சேர்ந்தவர்களை வரவழைத்து, கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

இது, சென்னை ஐகோர்ட் உத்தரவை மீறிய செயலாகும். புதுச்சேரியில் கொரோனா தொற்று இன்னும் அதிகமானால், அதற்கு முதல்வர் ரங்கசாமி தான் பொறுப்பேற்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
Next Story
Share it