பிரபல நடிகையை திருமணம் செய்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குனர்..

பிரபல நடிகையை திருமணம் செய்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குனர்..

பிரபல நடிகையை திருமணம் செய்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குனர்..
X

துல்கர் சல்மான் மற்றும் ரக்ஷன் ஆகியோர் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் அதே படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்த நிரஞ்சனி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் விஜய் டிவி பிரபல ரக்சனுக்கு ஜோடியாக நடித்தவர் தான் நிரஞ்சனி. மேலும் இது காதல் திருமணம் இல்லையாம். முழுக்க முழுக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடத்தப்படும் திருமணமாம்.

இவர், பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள் தான் இந்த நிரஞ்சனி.அவருக்கு மொத்தம் மூன்று மகள்கள். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கு பெறும் கனி தான் இவரின் மூத்த மகள். இரண்டாவது விஜயலஷ்மி. சென்னை -28, சரோஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசி மகள் தான் நிரஞ்சனி.

இன்று(25-02-2021) இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Tags:
Next Story
Share it