Theme Check

இதை பின்பற்றினால் பெட்ரோல், டீசல் விலை குறையும்..! - எல்.முருகன்

இதை பின்பற்றினால் பெட்ரோல், டீசல் விலை குறையும்..! - எல்.முருகன்

இதை பின்பற்றினால் பெட்ரோல், டீசல் விலை குறையும்..! - எல்.முருகன்
X

காஞ்சிபுரம் பழைய ரயில்வே கேட் பகுதியில் உள்ள குருசேத்திரப் பள்ளியில் இன்று தமிழக பாஜக சார்பில் ஏழை எளியோருக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கலந்துகொண்டு ஏழை மக்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்.



அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், “தமிழக சட்டப்பேரவையின் ஆளுநர் உரை, மு.க.ஸ்டாலின் புகழ்பாடும் உரையாகவே உள்ளது. தேர்தல் வாக்குறுதியில் இருந்த எதுவுமே ஆளுநர் உரையில் இல்லை என்பது ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் கொடுத்துள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று தெரிந்தும் திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மாணவர்களின் மன உறுதியை குலைக்கும் செயலை செய்து கொண்டிருக்கிறது. செப்டம்பர் 15ம் தேதிக்குள் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எப்போது தேர்தல் வந்தாலும் அதைச் சந்திக்க பாஜக தயாராக உள்ளது.

பெட்ரோல் - டீசல் விலை உயர்வை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டு வருகிறது. ஆனால், மாநில நிதி அமைச்சர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் - டீசல் விலை 5 ரூபாய் குறைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்தது. திமுக அதனை பின்பற்றினால், பெட்ரோல் - டீசல் விலை குறையும். சசிகலா விவகாரம் அதிமுகவின் உள்கட்சி பிரச்னை; அதைப் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை” என, தெரிவித்தார்.

Tags:
Next Story
Share it