'நீ பத்தினி என்றால் அவள் உடம்பில் தீ பிடிக்காது' - மகளை எரித்துக்கொன்ற தாய், 3ஆவது கணவன் கைது !!
'நீ பத்தினி என்றால் அவள் உடம்பில் தீ பிடிக்காது' - மகளை எரித்துக்கொன்ற தாய், 3ஆவது கணவன் கைது !!

2ஆவது கணவருக்கு பிறந்த மகளை உயிருடன் எரித்த தாயாரை அவரது மூன்றாவது கணவருடன் போலீசார் கைது செய்தனர்.
சென்னை திருவெற்றியூரில் சிறுமிக்கு நடந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவெற்றியூர் மேட்டுத்தெருவை சேர்ந்த ஜெயலட்சுமியின் (40), 3ஆவது கணவன் பத்மநாபன்.
முதல் கணவர் பால்வண்ணனை பிரித்த ஜெயலட்சுமி, பால்வண்ணனின் சகோதரர் துரைராஜை 2ஆவதாக திருமணம் செய்தார். அவர்களுக்கு பவித்யா என்ற 10 வயது மகள் உள்ளார். இந்த நிலையில், இரண்டாவது கணவரை பிரிந்த ஜெயலட்சுமி 3ஆவதாக லாரி ஓட்டுநர் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

ஏற்கனவே திருமணமான பத்மநாபன், மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். பத்மநாபனின் இரண்டு குழந்தைகள், ஜெயலட்சுமியின் இரண்டாவது கணவருக்கு பிறந்த 10 வயது மகள் பவித்யா ஆகியோர் ஒன்றாக வசித்து வந்தார். இந்நிலையில் ஜெயலட்சுமிக்கு 4ஆவதாக வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக பத்மநாபன் சந்தேகமடைந்தார். இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை வந்தது.

ஆனால், தனக்கு வேறொருவருடன் தொடர்பு இல்லையென்றும், தனது குழந்தையை காப்பாற்றவே தான் திருமணம் செய்ததாக அவரிடம் ஜெயலட்சுமி கூறியிருக்கிறார். ஆனால் பத்மநாபன் இதை நம்ப தயாராக இல்லை. அடிக்கடி பத்மநாபன் ஜெயலட்சுமி உடம்பில் வித்தியாசமான வாசனை வருகிறது, நீ எங்கு சென்று வருகிறாய் என சந்தேகப்படும்படி பல கேள்விகள் கேட்பது வழக்கமான ஒன்றாக இருந்து வந்துள்ளது.
இதனிடையே நேற்று இரவு பன்னிரண்டரை மணி அளவில் ஜெயலட்சுமியிடம் நீ கற்புக்கரசியாக இருந்தாள் பவித்ராவை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்து, நீ பத்தினி என்றால் அவள் உடம்பில் தீ பிடிக்காது என சொல்லியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி 10 வயது சிறுமியான பவித்யா உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், சிறுமியை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். பவித்யா உடலில் 78 சதவீதம் அளவுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தயார் ஜெயலட்சுமி, அவரது 3ஆவது கணவன் பத்மநாபன் ஆகியோரை திருவெற்றியூர் போலீசார் கைது செய்தனர்.
newstm.in

