Theme Check

மாமூல் கேட்டால் இனி குண்டாஸ்தான்.. போலீசார் கடும் எச்சரிக்கை..!

மாமூல் கேட்டால் இனி குண்டாஸ்தான்.. போலீசார் கடும் எச்சரிக்கை..!

மாமூல் கேட்டால் இனி குண்டாஸ்தான்.. போலீசார் கடும் எச்சரிக்கை..!
X

புதுச்சேரி பெரியகடை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், குடியிருப்பு சங்க பிரதிநிதிகளுடன் நல்லுறவு கூட்டம் நேற்று நடந்தது. எஸ்பி ஸ்வேதா, இன்ஸ்பெக்டர் கண்ணன், துணை தாசில்தார் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
காவலருக்கு கரோனா: புதுச்சேரி காவல் நிலையம் மூடல்- Dinamani
இதில் குடியிருப்பு சங்க நிர்வாகிகள் பேசுகையில், ‘அடையாளம் தெரியாத வாலிபர்கள் குடியிருப்பு பகுதியில் அதிகளவில் நடமாடுவதால், போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்' என வலியுறுத்தினர்.

வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பேசும்போது, 'வியாபாரத்திற்கு இடையூறாக உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

காந்தி வீதி, நேரு வீதி சந்திப்பில் மீன் இறக்கும் லாரி கழிவுகளால் பகலில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கடைகளுக்கு மக்கள் வருகை குறைவதால், மீன் இறக்கும் இடத்தை மாற்ற வேண்டும்.

மூடியிருக்கும் கடைக்கு முன்பு நடத்தப்பட்ட சண்டே மார்க்கெட் தற்போது திறந்து இருக்கும் கடை எதிரிலும் இயங்குகிறது. இதனால், நிரந்தர கடை வியாபாரம் பாதிக்கப்படுகிறது. மூடிய கடைக்கு முன்பு மட்டும் சண்டே மார்க்கெட் கடை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்' என வலியுறுத்தினர்.

போலீசார் பேசுகையில், ‘வியாபாரிகள் தங்கள் கடையின் உட்புறம் மற்றும் வெளிப்பகுதியில் பொருத்திய சிசிடிவிக்கள் 24 மணிநேரமும் இயங்கும் வகையில் வைக்க வேண்டும்.

இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு ஆன்லைன் வழியாக பணம் செலுத்தும்போது, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கடைகளில் யாரேனும் மாமூல் கேட்டு மிரட்டினால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாமூல் கேட்போர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர்' என உறுதி அளித்தனர்.

Next Story
Share it