பணம் கொண்டுச்சென்றால் இனி ஆவணங்களும் கட்டாயம்.. அமலுக்கு வந்த விதிமுறைகள் !!
பணம் கொண்டுச்சென்றால் இனி ஆவணங்களும் கட்டாயம்.. அமலுக்கு வந்த விதிமுறைகள் !!

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்த நிலையில், மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர்கள் உள்ளிட்டோரை தேர்வு செய்யும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. இந்த நிலையில், நேற்று மாலை அறிவிப்பு வெளியிட்ட மாநில தேர்தல் ஆணையம், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் உடனே அமலுக்கு வந்த நிலையில், சென்னையில் 24 மணி நேரமும் கண்காணிக்க கூடிய வகையில் 45 பறக்கும் படைகள் அமைக்கப்ட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 37 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் நடவடிக்கைகள் முடியும் வரை 24 மணி நேரமும் வாகன சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பணம், பொருட்களை பறிமுதல் செய்யும் போது வீடியோ எடுத்து அதன் விவரங்களை உடனுக்குடன் அனுப்பி வைக்க வேண்டும். வியபாரிகளிடம் இருந்து பணம் பரிமுதல் செய்யப்பட்டால் உரிய ஆவனம் சமர்பித்த பிறகு திருப்பி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, மாநகராட்சிகள், மாவட்ட எல்லைகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்துமாறு ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலில் பணபட்டுவாடாவை தடுக்க வருவாய்துறையினர், காவல்துறையினர் அடங்கிய சிறப்பு பறக்கும் படை அமைக்கப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளின் படி தனி நபர் அதிக பட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை கொண்டு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ளதால், அதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாகியுள்ளது.
newstm.in

