மெடிக்கல்களில் இந்த மருந்து வாங்கினால் இனி கொரோனா டெஸ்ட்... இது புதிய திட்டம் !!
மெடிக்கல்களில் இந்த மருந்து வாங்கினால் இனி கொரோனா டெஸ்ட்... இது புதிய திட்டம் !!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை மிகத்தீவிரமாக பரவி வரும் நிலையில், தலைநகர் சென்னையில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. எனினும் கடந்த சில நாட்களாக சென்னனையில் பாதிப்பு சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. எனினும் சென்னையில் தொற்று பாதித்து சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் சுமார் 500 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜனவரி 20ஆம் தேதி நிலவரப்படி ஒரே நாளில் 8,011 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சிகிச்சை பலனின்றி 14 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா பரிசோதனையை மேலும் அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறினார். சளி, காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் 1913 என்ற உதவி எண்ணை அழைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
அதே நேரத்தில் சளி, காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரையின்றி தாங்களாகவே மருந்து கேட்டு வரும் நபர்களின் விபரங்களை மருந்தக ஊழியர்கள் சேகரித்து வைத்து மாநகராட்சிக்கு வழங்கினால் அவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அறிகுறி உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும். கொரோனா பரிசோதனை முடிவுகள் விரைவாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்தார்.
newstm.in

