தினமும் 9 மணி நேரம் தூங்கி வழிந்தால்.. ரூ.1 லட்சம் சம்பளம் !
தினமும் 9 மணி நேரம் தூங்கி வழிந்தால்.. ரூ.1 லட்சம் சம்பளம் !

இரவில் நீண்ட நேரம் உறங்கி, பகல் பொழுதில் தனது அலுவல்களை கவனித்துக் கொள்ளும் இயற்கை முறையைத் தான் மனித சமுதாயம் நெடுங்காலமாகப் பின்பற்றி வருகிறது. அதேநேரத்தில் தற்போது உலகம் முழுவதும் பகலில் இரவைப் போல உறங்கியும், இரவில் பகலைப் போல வேலை செய்யும் நிலைமை பல மடங்கு அதிகரித்துவிட்டது.
இந்த நிலையில் நாள்தோறும் 9 மணி நேரம் உறங்கினால் ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் என தனியார் நிறுவனம் ஒன்று அதிரடியாக அறிவித்துள்ளது.
பெங்களூரை சேர்ந்த ‘வாக்ஃபிட்’ என்ற நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உறக்கம் குறித்து ஆய்வு செய்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே கடந்த ஆண்டு உறக்கம் குறித்து ஆய்வு செய்ய பலரை தேர்வு செய்து அவர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்தது.
இந்த நிலையில் இந்தாண்டும் பெங்களூரை அந்நிறுவனம் மக்களின் தூக்க முறைகளை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக ’ஸ்லீப் இன்டர்ன்ஷிப்’ முறையை அறிவித்துள்ளது.
இதன்படி இந்த இன்டர்ன்ஷிப்’ முறைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் தினமும் 9 மணிநேரம் தூங்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து நூறு நாட்கள் ஒன்பது மணி நேரம் தூங்கினால் அவர்களுக்கு ஒரு லட்சம் சம்பளம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் 9 மணி நேரம் தூங்குவதற்கு சம்பளம் கொடுக்கும் இந்த நிறுவனத்தின் அறிவிப்பால் ஆச்சரியமடைந்து பலர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸில் 100 நாட்கள் தங்கி வெற்றிபெற வேண்டும். ஆனால் இங்கு உறங்கியே வெற்றிபெற வேண்டும் என பலரும் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
newstm.in