லீவு எடுத்தால் சம்பளம் பிடிக்கக் கூடாது.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..!
லீவு எடுத்தால் சம்பளம் பிடிக்கக் கூடாது.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில் வருகிற 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு நாளன்று, வாக்குரிமை உள்ள அனைவருக்கும் விடுப்பு வழங்க வேண்டும் என்று நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாளான 19-ம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அன்று விடுப்பு எடுக்கும் தொழிலாளர் எவருக்கும் சம்பள பிடித்தமோ, சம்பளக் குறைப்போ இருக்க கூடாது.
இந்த உத்தரவுகளை மீறும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Next Story

