இனி ஏடிஎம்மில் பணம் எடுத்தால் அதிக கட்டணம்.. வாடிக்கையாளர்களே உஷார்! !
இனி ஏடிஎம்மில் பணம் எடுத்தால் அதிக கட்டணம்.. வாடிக்கையாளர்களே உஷார்! !

அவசரத்திற்கு வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க பெரும்பாலான மக்கள் ஏடிஎம் மையம் செல்வது வழக்கமான ஒன்று தான். ஆனால் தற்போது பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் கொஞ்சம் அதிக செலவழிக்க வேண்டியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி கொடுத்திருக்கும் புதிய அறிவிப்பு தான் இதற்கு மிக முக்கிய காரணம்.
ஏற்கெனவே ஒவ்வொரு வங்கியும் ஏ.எடி.எம் பரிவர்த்தனைக்கு குறிப்பிட்ட கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கிறது. இதில் ஜி. எஸ்.டி கட்டணமும் அடங்கும். ஆனால், இன்றுமுதல் ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த கட்டணத்தில் இருந்து சற்று கூடுதல் கட்டணத்தை வங்கிகள் இனி வசூலிக்கும்.

வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கு இருக்கும் வங்கியின் ஏ.டி.எம். மூலம் மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கி ஏ.டி.எம்.கள் மூலம் 3 முறையும் இலவசமாக பணம் எடுத்தல் உள்ளிட்ட பரிமாற்றங்களை (நிதி அல்லது நிதி சாரா பரிமாற்றங்கள்) செய்ய முடியும்.
அதற்கு மேல் நடைபெறும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்தவகையில் அனுமதிக்கப்பட்ட இலவச பரிமாற்றத்துக்கு அப்பால் நடைபெறும் பரிமாற்றங்களுக்கு ரூ.20 கட்டணமாக பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த கட்டணம் இன்று (சனிக்கிழமை) முதல் உயர்த்தப்படுகிறது. அதன்படி, ரூ.20-க்கு பதிலாக ரூ.21 ஆக இது அதிகரிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. ஏ.டி.எம். பராமரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட செலவினங்களுக்கான நிதி தேவை அதிகரித்து உள்ளதை கருத்தில் கொண்டு இந்த கட்டண உயர்வை அமல்படுத்துவதாக ரிசர்வ் வங்கி ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
newstm.in

