இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் : அண்ணாமலை!!
இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் : அண்ணாமலை!!

இளையராஜாவுக்கு ராஜ்ய சபா பதவி கொடுத்து அடைக்க வேண்டாம், அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை போரூரில் தூய்மை பணியாளர்களை கவுரவித்து அவர்களுக்கு பிரியாணி வழங்கி சமபந்தி போஜனம் விழா பா.ஜ.க சார்பில் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை எழுதி இருந்தார். ஆனால் அம்பேத்கரை வைத்து அரசியல் செய்ய கூடிய கட்சிகள் இளையராஜாவைப் பற்றி பதிவுகள் வெளியிட்டனர் என்று கூறினார்.

இளையராஜாவுக்கு கருத்து சுதந்திரம் உள்ளது. அவர் பாஜகவைச் சேர்ந்தவர் கிடையாது. பாஜகவிற்கும், அவருக்கும் சம்பந்தம் இல்லை. திமுக ஐடி விங் இளையராஜா குறித்து தரக்குறைவான விமர்சனங்கள் செய்தனர்.
சமூகநீதி பற்றி பேசக்கூடிய நீங்களே ஒருவர் சொல்லக் கூடிய கருத்தை தரக்குறைவான விமர்சனங்கள் செய்தால் உங்களின் சமூக நீதி என்பது போலி சமூகநீதி என்பதை தமிழக மக்கள் பார்த்து விட்டார்கள். முடிவு செய்து விட்டார்கள்.

இளையராஜா பாஜகவை சார்ந்தவரல்ல. தமிழக மக்களின் அன்பை பெற்றவர். இதை யாரும் அரசியலாக்க வேண்டாம். ராஜ்யசபா எம்.பி பதவி கொடுத்து அடைக்க வேண்டாம் என்பது எனது கருத்து. அவருக்கு பாரத ரத்னா கொடுத்து கவுரவபடுத்த வேண்டும் என்பது எங்களது வேண்டுகோளாக உள்ளது என்று தெரிவித்தார்.
newstm.in

