Theme Check

சட்டவிரோத தங்க வேட்டை.. அமேசான் நதியில் அழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் !!

சட்டவிரோத தங்க வேட்டை.. அமேசான் நதியில் அழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் !!

சட்டவிரோத தங்க வேட்டை.. அமேசான் நதியில் அழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் !!
X

அமேசானின் மதேரா நதியில் சட்டவிரோதமாக தங்க வேட்டைக்காக ஏராளமான படகுகள் குவிந்துள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலின் அமேசான் காடுகளில் தங்கச் சுரங்கங்கள் இருப்பதாக நீண்ட காலமாக ஒரு தகவல் உள்ளது. இதனால் தொடர்ந்து தங்க வேட்டை செய்ய பலர் அமேசான் காடுகளுக்குள் சென்று முயன்றுள்ளனர். இதனால் காடுகள் அழிப்பு நடப்பதாகவும் சர்வதேச அளவில் குற்றச்சாட்டு உள்ளது.

brazil river

அண்மையில் நடந்த கிளாஸ்கோ பருவநிலை மாற்ற மாநாட்டில் அமேசான் மழைக்காடுகளைப் பாதுகாப்பது குறித்து உறுதியளிக்கப்பட்டது. இந்த நிலையில், நூற்றுக்கணக்கான படகுகள் தங்கத்துக்காக அமேசான் நதிகளில் குவிந்துள்ள புகைப்படம் வெளியாயகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பம்புகள் பொருத்தப்பட்ட மிதவைப் படகுகள் நீண்ட மதேராநதி முழுவதும் ஆக்கிரமித்துள்ளதாகவும், இவை தங்கத்துக்காக ஆற்றுப்படுகைகளைச் சுரண்டி வெற்றிடமாக்கி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

brazil river

ஆனால் பிரேசில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பிரேசிலின் கிரீன்பீஸ் செயற்பாட்டாளர் டேனிக்லி அகுயர் கூறியுள்ளார் . மேலும் வலதுசாரி அதிபர் ஜெய்ர் போல்சனோரா 2019ஆம் ஆண்டில் பொறுப்பேற்றதிலிருந்து சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை அமைப்பு மிகவும் வலுவிழந்துள்ளதாகவும், சட்டவிரோதமாக அமேசான் காடுகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களையும் தங்கச் சுரங்க நடவடிக்கைகளையும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

அமேசானின் மதேரா நதி சுமார் 3,300 கி.மீ. தொலைவு உள்ளது. இந்த நதியில் தொடர்ந்து சட்டவிரோத அகழ்வு படகுகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. ஆனால், சட்டவிரோத தங்க வேட்டையைத் தடுக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

newstm.in

Tags:
Next Story
Share it